Home அன்னை ஆதிபராசக்தி அருளிய தைப்பூசக் கலசம்

அன்னை ஆதிபராசக்தி அருளிய தைப்பூசக் கலசம்

ஓம் சக்தி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம், மேல்மருவத்தூர்

2017 – 18 - இருமுடி தைப்பூச விழாவிற்கு அம்மாவின் அருள்வாக்கு

அன்னை ஆதிபராசக்தி அருளிய தைப்பூசக் கலசம்

மங்கள காரியங்கள் வீட்டில் நடக்க லட்சுமி கடாட்சம் செழிக்க அம்மன் சிலையுடன் கூடிய கலசத்தினை வாங்கிச் சென்று அதில் உள்ள இரண்டு பாவை விளக்குகளையும் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

  1. தேங்காயில் உள்ள நவமணிகளை வலது கையில் மகளிர்; காலை முதல் மாலை வரை கட்டிக் கொள்ள வேண்டும். (இரவில் பூஜையறையில் வைத்துவிடவும்.)
  2. கலசத்தில் உள்ள மஞ்சள் நீரினை குடும்பத்தினர் கண், காது, வாய். தலை, கையில் மஞ்சள் நீர் தடவி “அமைதி, நிம்மதி” வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவும். மீதமுள்ள நீரினை மாவிலையால் வீடு, தோட்டம், தொழில் செய்யும் இடங்களில் தெளிக்க வேண்டும்
  3. பாவை விளக்கை ஏற்றி வழிபடவும்.
  4. கலசத்தினை அம்மன் சிலையுடன் பூஜையறையில் வைத்து வழிபடவும்

 

குறிப்பு: நவமணியுடன் கூடிய மஞ்சளை தைப்பூச ஜோதியில் காட்டி மகளிர் கையில் ஒரு நாள் கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு அந்த மஞ்சளை இடித்து தண்ணீரில் கலந்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.

நவதானிய தைப்பூச ஜோதி

  1. நல்வினை காக்க நம் அன்னை அருளிய நவதானியத்துடன் நாகஜோதி பீடத்தினை வாங்கி அதிலுள்ள ஊதுவத்தி ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்
  2. வழிபாடு முடித்த பிறகு நவதானியங்களை மஞ்சள் துணியில் கட்டி பூஜையறையில் வைக்க வேண்டும்
  3. இந்த பூஜையை செய்வதன் பலனாக “நாகதோஷம், பில்லி, சூனியத்” தாக்கத்திலிருந்து விடுபடலாம் என அன்னை அருள்வாக்கில் கூறியுள்ளார்கள்.
  4. நாகஜோதி பீடத்தினை அம்மன் சிலையுடன் பூஜையறையில் வைத்து வழிபடவும்

 

குறிப்பு: பீடத்துடன் கூடிய சிலையில் உள்ள மஞ்சளை தைப்பூச ஜோதியில் காட்டி ஆண்கள் கையில் ஒரு நாள் கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு அந்த மஞ்சளை இடித்து தண்ணீரில் கலந்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.