இன்னல் தணிக்கும் இருமுடி

விரத முறைகள், பொருட்கள் மற்றும் ஆன்மீக பலன்கள்

"இருமுடி என்பது இருள்முடி"

இதயத்தில் உள்ள இருளைப்போக்க அணியும் முடி என்று பொருள். கணவன்-மனைவி இருவரின் அகத்தோற்றத்தையும் முடிபோடுவது என்று பொருள்; மற்றும் மனிதனின் அகமும் புறமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையும் இருமுடி குறிக்கும்.

அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு

"அன்னையை மனமுருக நினைத்து, தன் குறைகளுக்காக வேண்டி சக்தி மாலை அணிந்து முறைப்படி விரதமிருந்து மேல்மருவத்தூர் ஆலயம் வலம் வந்து அன்னையை சரணடைந்தால் நினைத்த பலன் அத்தனையும் நிறைவேறும்."

"9 முறை சக்தி மாலை அணிந்தவர்களை எந்தவித தீய சக்தியும் அண்டாது."

"பெருமை பணத்தால் இல்லை; அன்பாலும், தொண்டாலும் வருகின்ற பெருமையே பெருமை! அவற்றிற்குத்தான் பலனுண்டு."

மகளிருக்கு சிறப்பு அனுமதி

"மாலை அணிந்து விரதம் இருந்து ஆலயம் வந்து திரும்புவதற்கு மகளிர்க்கு மாதவிலக்கு தடையல்ல. ஏற்றுக்கொள்பவள் நான்; மற்றவர்கள் தடையிட்டாலும் எனக்குத் தடையல்ல!"

Spiritual Journey

மருவத்தூர் ஆன்மீக பயணம்

பூஜை பொருட்கள்

இருமுடி பையில் இருக்க வேண்டியவை

முன்கட்டில் வைக்க வேண்டிய 13 பொருட்கள்

1

தேங்காய்

2

கற்பூரம்

3

மஞ்சள்

4

குங்குமம்

5

ஊதுபத்தி

6

எலுமிச்சம்பழம்

7

கதம்பப்பொடி / அபிஷேகத்தூள்

8

பன்னீர்

9

சந்தனம்

10

டைமண்ட் கல்கண்டு

11

சாம்பிராணி

12

மெழுகுவர்த்தி

13

நல்லெண்ணெய் / நெய்

பின்கட்டு

ஒரு கிலோ பச்சரிசி + காணிக்கை

இருமுடி நன்மைகள்

கோரிக்கை வைத்து சங்கல்பம் செய்து சக்தி மாலை அணிந்து உண்மை உணர்வுடன் இருமுடி செலுத்தினால் 11 வகையான நன்மைகள் கிட்டும்.

"கிடைக்கின்ற வாய்ப்பையும், கொடுக்கின்ற வாய்ப்பையும் நழுவ விடாதே"
- அன்னை அருள்வாக்கு
  • உடல்நலமின்றி கஷ்டப்படுபவர்கள் உடல்நலம் பெறுவர்.
  • ஊழ்வினை அறுந்து மன அமைதியும், உறுதியும் பெறுவர்.
  • தடைபட்ட திருமணங்கள் தடைநீங்கி திருமணம் கூடும்.
  • குழந்தைப்பேறு இல்லாதவர்கட்கு மகப்பேறு கிடைக்கும்.
  • கல்வி, அறிவு, மேன்மைகள் பெருகும்.
  • வேலையின்றி அவதிப்படுபவர்க்கு வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிடைக்கும்.
  • வியாபாரிகளுக்கு வாணிபம் பெருகி நியாயமான லாபம் கிடைக்கும்.
  • விவசாயிகளுக்கு வளம் பெருகும்.
  • குடும்பத்தொல்லைகள் தீர்ந்து மன அமைதி, செல்வச் செழிப்பையும் பெறுவர்.
  • நம்மைத் தீயவர்களிடமிருந்து காப்பாற்றி நல்லொழுக்கத்தோடு வாழ வழி கிடைக்கும்.
  • பக்தியிலே இணைந்து ஆன்மிகத்திலே ஈடுபாடு உண்டாகும் மற்றும் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.
விரத முறை

சக்தி மாலை விரத முறைகள்

கடைபிடிக்க வேண்டிய 11 விதிமுறைகள்

வயது வரம்பின்றி குடும்பத்தில் உள்ள அனைவரும் (ஆடவர், மகளிர், சிறுவர்) சக்திமாலை அணிந்து இருமுடி செலுத்தலாம்.

எந்த மதத்தினரும் மாலை அணிந்து இருமுடி எடுக்கலாம்.

உங்கள் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்திற்குச் சென்று சக்திமாலை அணிந்து இருமுடி எடுக்க வேண்டும்.

சக்தி மாலை அணியும் பக்தர்கள் 5 அல்லது 3 நாட்கள் விரதம் இருந்து பிறகு இருமுடி செலுத்த வேண்டும்.

விரத நாட்களில் சிகப்பு நிற ஆடை உடுத்த வேண்டும்.

விரத நாட்களில் ஒரு வேளை உணவைத் தவிர்க்க வேண்டும்.

காலை, மாலை இருவேளைகளிலும் நீராடி அன்னையை வழிபடுதல் வேண்டும்.

விரத நாட்களில் லாகிரி, போதை வஸ்துக்களைத் தவிர்க்க வேண்டும்.

உறங்கும்போது வழக்கமாக படுக்கை வசதிகளைத் தவிர்த்து செவ்வாடை அல்லது மஞ்சளாடை விரித்து அதன் மேல் உறங்க வேண்டும்.

டி.வி, சினிமா, கிளப் போன்ற கேளிக்கைகளைத் தவிர்த்து ஐம்புலன்களையும் அடக்கி, அன்னையின் திருநாமத்தை நினைவில் நிறுத்த வேண்டும்.

ஒன்பது முறை இருமுடி செலுத்தியவர்கள் மஞ்சள், சிகப்பு கலந்த ஆரஞ்சு நிறத்தில் உள்ள ஆடைகளையே அணிந்து வரவேண்டும்.

அன்னதானப் புண்ணியம்

நாம் எடுத்துச் செல்லும் அரிசி அன்னதானத்திற்கு உதவுவதால் அன்னதானப் புண்ணியம் கிட்டுகிறது. அதேபோல் நாம் செலுத்தும் காணிக்கை அறநிலையின் சார்பாக செய்யப்படும் பல்வேறு மருத்துவ, கல்வி, சமுதாயப் பணிகளுக்குப் பயன்படுவதால் அந்தப் புண்ணியமும் நமக்குக் கிட்டுகிறது.

Explore More Spiritual Wisdom

Visit other sections to deepen your spiritual understanding